கண்டறியப்பட்ட ட்ரோன்கள் X
இந்தியா

’பாகிஸ்தான் திட்டங்களை முறியடிப்போம்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைபுறப் பகுதிகளை தாக்கிவரும் நிலையில், அதுதொடர்பான பதிவொன்றையும் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் இருதரப்பிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எந்த சமரசமும் இன்றி துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தையும் அழித்தொழித்துள்ளது.

இந்நிலையில்தான், அதுதொடர்பான பதிவொன்றை இந்திய ராணுவம் இன்று காலை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

அதில், ”மேற்குப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு, அமிர்தசரஸின் காசா கான்ட் பகுதியில் ஆயுதமேந்திய எதிரி ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நமது வான் பாதுகாப்புப் பிரிவுகள் விரைவாக பதிலளித்து, அனைத்து விரோதமான UAV களையும் இடைமறித்து செயலிழக்கச் செய்தன. இந்தியாவின் இறையாண்மையை மீறுவதற்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதற்கும் இந்த அப்பட்டமான முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாதது." என்று தெரிவித்துள்ளது.