பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் மீது இந்தியா அறிவிக்கப்படாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய வீரர்கள் இருவரின் உடலை சிதைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது மோடி அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். ’பாகிஸ்தானியரின் தாக்குதலால் மக்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். இந்த வேதனை நீண்ட நாட்களுக்கு நிலைக்க அனுமதிக்க மாட்டோம். எந்த சூழலிலும் இந்தியர்கள் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்படமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது எந்தவித அறிவிப்புமின்றி தாக்குதல் நடத்துவோம்’ என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.