டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் 200 பேரின் உயிர் ஆபத்தில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுளது.
இதனிடையே ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை சேர்க்கையை மூடுவதாகம் நோயாளிகளை வெளியேற்றி வருவதாகவும் டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.