இந்தியா

“வேளாண் சட்டங்களில் திருத்தம்; மன்மோகன் சிங் சொன்னதைத்தான் செய்தோம்” - மோடி

webteam

குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும் என மாநிலங்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, “குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும். ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் வழங்குவதும் தொடரும். போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு வேளாண் சட்டத்தின் அவசியத்தை நாம் விளக்க வேண்டும். விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வேளாண் சீர்திருத்தத்தால் ஏற்படும் விமர்சனங்களை நான் ஏற்கிறேன். பாராட்டை எதிர்க்கட்சிகள் ஏற்கட்டும். வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் பேசியதை நாங்கள் செய்திருக்கிறோம். விவசாய பிரச்னைகள் குறித்து பேசுவோர் சிறுவிவசாயிகளை மறந்து விடுகின்றனர்” என்றார்.