இந்தியா

ஊரடங்கை நீட்டிக்கத் தயார் என பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் - புதுச்சேரி முதல்வர்

webteam

புதுச்சேரி மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கத் தயார் என பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியை சேர்ந்த 4பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாஹே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக, கர்நாடக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் உறுதி அளித்தேன். கிராமப்புறங்களில் வீடு, விடாக சென்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்து அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளேன். அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய
வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

பொருளாதார பாதிப்பு ஏற்பட்டாலும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வரும் 14ஆம் தேதிக்கு பிறகு தேவைப்பட்டால் புதுச்சேரி மாநில மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற ஊரடங்கு சட்டத்தை நீட்டிக்க மாநில அரசு உதவ தயாராக உள்ளது. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என தெரிவித்தார்.