மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் வாரம் இரண்டு நாள்கள் மட்டுமே பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேற்கு வங்கம் மாநிலத்தில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1400-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருக்கிறது.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.