இந்தியா

கேரளத்தில் வாட்டர் டாக்சி : அக்டோபர் முதல் ஆரம்பம்

EllusamyKarthik

நம் ஊர் சாலைகளில் மக்களை ஏற்றிக்கொண்டு பரபரக்கும் வாடகை டாக்சிகளை போல கேரளாவில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ‘வாட்டர் டாக்சி’ என்ற பெயரில் படகு சேவையை கொண்டுவர கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 

இதனை நடைமுறையில் கொண்டு வர முதற்கட்டமாக பத்து பேர் அமரக்கூடிய வகையிலான நான்கு கட்டுமர படகுகளை வாங்கவும் முடிவு செய்துள்ளது.

கேரளாவின் ஆலப்புழா பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இந்த சேவையை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது கேரள மாநில நீர் போக்குவரத்து துறை. 

‘இந்த படகுகளில் பயணம் செய்ய விரும்பினால் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் போதும். அவர்களை அவர்கள் இருக்கின்ற இடத்திலிருந்தே பிக்-அப் செய்து கொள்வோம். மணி கணக்கில் பயணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது என தெரிவித்துள்ளார் கேரள மாநில நீர் போக்குவரத்து துறை இயக்குனர் ஷாஜி. 

இந்த வாட்டர் டாக்சிக்கான படகுகளை கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாக்கி வருகிறது. வரும் அக்டோபர் முதல் வாரம் முதல் வாட்டர் டாக்சி சேவை ஆரம்பமாக உள்ளது.