இந்தியா

தண்ணீருக்காக கிணற்றுக்குள் ஓர் சாகசப் போராட்டம்: பரிதவிக்கும் மக்கள்!

webteam

மத்தியப் பிரதேச மாநிலத்தில் குடிநீருக்காக மக்கள் உயிரை பணயம் வைக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் டிண்டோரியில் (Dindori) உள்ள ஷாஹ்புரா (Shahpura) கிராமத்தில் நீர் நிலைகள் வற்றிவிட்டன. இதனால் குடிதண் ணீருக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த ஊரில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு வெளியே இருக்கும் கிணறு ஒன்றின் அடியி ல் குறைந்த அளிவில் இருக்கும் தண்ணீர்தான் மக்களை காப்பாற்றி வருகிறது. 

கிணற்றின் மேல் தண்ணீர் இருந்தால் வாளி கொண்டு இறைத்து தண்ணீர் எடுக்கலாம். ஆனால், கிணற்றின் அடியில் குறைந்த அளவே இருப்பதால், ஆபத்தான முறையில் தங்கள் குழந்தைகளை கிணற்றுக்குள் இறக்குகின்றனர். மேலும் கீழும் என ஒரே படி இருக்கும் இந்தக் கிணற்றில் இறங்கி தண்ணீரை மேலே கொண்டு வருகின்றனர். தினமும் உயிரைப் பணயம் வைத்து நடக்கும் இந்தச் சாகச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இப்பகுதிக்கு தினமும் 2 டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்க உள்ளூர் நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.