இந்தியா

'உனக்கு என்ன ஆச்சு? ஏன் வேகமா நடக்க முடியாதா?' - யாரை திட்டினார் ரோகித் சர்மா

'உனக்கு என்ன ஆச்சு? ஏன் வேகமா நடக்க முடியாதா?' - யாரை திட்டினார் ரோகித் சர்மா

JustinDurai

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சாஹலை கேப்டன் ரோகித் சர்மா திட்டிய வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணியின் பந்துவீச்சு ஆட்டத்தில் 45-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச வந்த போது, கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்ட் செட்டிங்கை மாற்றினார். பேட்டிங் செய்துக்கொண்டிருந்த ஜோசஃப், தூக்கி அடிப்பார் என்று எண்ணியதால், பவுண்டரி அருகில் வேகமாக ஃபீல்டர்களை மாற்றி வந்தார். அப்போது சாஹல் மட்டும் பொறுமையாக வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ரோகித் சர்மா, 'உனக்கு என்ன ஆச்சு? ஏன் உன்னால வேகமா நடக்க முடியாதா? சீக்கிரம் போய் அங்கே நில்'' என இந்தியில் கோபத்துடன் திட்டினார். சாஹலை கேப்டன் ரோகித் சர்மா திட்டிய வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதேபோல்தான் முதல் போட்டியில் பவுண்டரி லைனுக்கு சென்ற பந்தை பிரஷித் கிருஷ்ணா சரியாக தடுக்காததால், பொறுமை இழந்த ரோகித் சர்மா அவரை கடுமையாக திட்டித்தீர்த்தார்.