இந்தியா

முன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்கு : போலீசார் துப்பாக்கிகள் வெடிக்காததால் அதிர்ச்சி

முன்னாள் முதல்வரின் இறுதிச் சடங்கு : போலீசார் துப்பாக்கிகள் வெடிக்காததால் அதிர்ச்சி

rajakannan

பீகார் முன்னாள் முதல்வரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் போலீசார் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் முழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாந்த் மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு, சுபவுல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தகன நிகழ்வின் போது, அரசு சார்பில் 22 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டது.

போலீசார் ஒன்றாக தங்களது துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். ஆனால், ஒருவரது துப்பாக்கியில் இருந்து குண்டு வெடிக்கவில்லை. முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கி குண்டுகள் வெடிக்காதது குறித்து வீடியோ உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.