ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் செல்போன் மற்றும் அவரின் நண்பர்கள், ஆலோசகர்களின் செல்போன்கள் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா மற்றும் பல மத்திய அமைச்சர்களின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரும், மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் செல்போனும் உளவுபார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள அஷ்வினி வைஷ்ணவின் போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாதாக யாரையும் மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.