இந்தியா

ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவைப்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி ரத்து - மத்திய அரசு முடிவு

ஆக்சிஜன் உற்பத்திக்கு தேவைப்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி ரத்து - மத்திய அரசு முடிவு

jagadeesh

ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கும் வகையில் ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்களின் இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்கள் வரை இறக்குமதி வரியை முழுவதும் ரத்து செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு. இதனையடுத்து ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கும் வகையில் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்களின் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.