இந்தியா

மேகாலயா, நாகலாந்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்

மேகாலயா, நாகலாந்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல்

webteam

மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் தலா 60 தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் குண்டுவெடிப்பில் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாகலாந்தில் வடக்கு அங்காமி தொகுதியில் என்டிபிபி தலைவர் நேபியோ போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதனால் இரண்டு மாநிலங்களிலும் தலா 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. 

வடகிழக்கில் அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி நடத்திவரும் பாரதிய ஜனதா, திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வரும் 3ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. கடந்த 18ம் தேதி திரிபுராவில் தேர்தல் நடைபெற்றது.