புதிய வாக்காளர் அட்டை முகநூல்
இந்தியா

இனிமேல் 15 நாட்களில் புதிய வாக்காளர் அட்டை... தேர்தல் ஆணையத்தின் சூப்பர் அப்டேட்..!

புதிய வாக்களர் அட்டையை விண்ணப்பித்தால்,அது வந்து சேர ஒரு மாதம் ஆகும் பட்சத்தில், இனி 15 நாட்களில் விநியோகிக்கும் வகையில், புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்திய தேர்தல் ஆணையம், கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வாக்காளர் அட்டைகளை 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில், புதிய நடைமுறை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிதாக பதிவு செய்தாலோ அல்லது ஏற்கெனவே உள்ள வக்களர் அட்டையில் திருத்தம் மேற்கொண்டாலோ அடுத்த 15 நாட்களில் உங்களிடம் வந்து சேரும், இதற்காக தனது புதிய இணையதளத்தில் தகவல் தொழில்நுட்ப செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம், அட்டை உருவாக்கப்பட்டது முதல் தபால்துறை மூலம் வாக்காளர்களிடம் வந்து சேரும் வரையிலான ஒவ்வொரு கட்டத்தையும் வாக்காளர்கள் டிராக் செய்யும் வண்ணம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலுக்கு (NVSP) செல்லவும்.

  • மேல் வலது மூலையில் உள்ள "Signup" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

  • உங்கள் பெயர், கடவுச்சொல்லை (password) , உருவாக்கிக் கொள்ளவும். அடுத்த கட்டமாக இதிலிருந்து OTP வரும்.

  • உங்கள் கணக்கைச் சரிபார்க்க உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ அதில் பதிவிட்டு கொள்ளவும் .

  • உங்கள் மொபைல் எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி போர்ட்டலில் உள்நுழைந்து, பின்னர் OTP மூலம் சரிபார்க்கவும்.

  • புதிய வாக்காளர் அட்டையை பெற, "படிவம் 6 ” என்பதை கிளிக் செய்து அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை விண்ணப்பிக்கவும்.

  • சமர்ப்பிக்கும்முன் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, உங்கள் விண்ணப்ப படிவம் சரியாக தகவல்களுடன் உள்ளதாக என்பதை சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்

வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பத்தை எவ்வாறு கண்காணிப்பது?

NVSP போர்ட்டலுக்கு சென்று, உங்கள் மொபைல் எண், கடவுச்சொல், கேப்ட்சா குறியீடு மற்றும் OTP (one time password) ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்நுழைந்த பிறகு விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கும் பகுதிக்கு செல்லவும்.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்ப எண்ணை உள்ளிடவும். விண்ணப்ப நிலையை அறிய உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து ’submit’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பின்னர் தேவையான தகவல்களை காணலாம்.