சத்தீஸ்கரில் கடந்த ஏப்ரல் மாதம், மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் குடும்பத்தினருக்கு, பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் 25 வீடுகளை நன்கொடையாக அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 4 தமிழக வீரர்கள் உள்பட 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வீர மரணமடைந்தனர்.
இவர்களின் குடும்பங்களுக்கு பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தனது கட்டுமான நிறுவனம் சார்பாக, வீடுகள் நன்கொடையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மும்பையில் கட்டப்பட்டுள்ள தனது நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் 25 வீடுகளை, உயிரிழந்த 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் குடும்பத்தினருக்கு தற்போது அவர் அளித்துள்ளார். இவர் சுனாமியின் போது கடலூர் அருகே ஒரு கிராமத்தையே தத்து எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.