இந்தியா

டிக்கெட் விலை ரூ.799 - விமான நிறுவனம் அதிரடி சலுகை

டிக்கெட் விலை ரூ.799 - விமான நிறுவனம் அதிரடி சலுகை

webteam

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 799 ரூபாய்க்கு சலுகை விலையில் டிக்கெட்களை அறிவித்துள்ளது. 

டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம், தற்போது "ஃப்ரீடம் டூ ஃப்ளை" என்ற சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, எகானமி வகுப்புக்கு 799 ரூபாயும், பிரீமியம் எகானமி வகுப்புக்கு 2,099 ரூபாய் டிக்கெட் விலை அறிவித்துள்ளது. ஆகஸ்டு 23, 2017 முதல் ஏப்ரல் 19, 2018 வரைக்கான பயணத்திற்கு டிக்கெட்டுக்களை இன்று காலை 12 மணி முதல் நாளை இரவு 11.59 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீநகர்-ஜம்மு பயணத்திற்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அதே சமயத்தில் மற்ற கட்டணங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.