இந்தியா

உ.பி. இடைத்தேர்தல் வாக்குச் சீட்டில் விராத் கோலி!

உ.பி. இடைத்தேர்தல் வாக்குச் சீட்டில் விராத் கோலி!

webteam

உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் வழங்கப்படும் வாக்குச்சீட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் பெயர் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்புர் மற்றும் பூல்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை. இந்நிலையில் தொகுதி மக்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவர் பெயரில் வாக்குச் சீட்டும் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேர்தல் அதிகாரி பிரபுநாத் கூறும்போது, ‘இந்த சீரியஸ் பிரச்னை. இது தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. தவறு எங்கே நடந்தாலும் நடவடிக்கைப்படும்’ என்றார்.

கிரிக்கெட் வீரர் விராத் கோலி டெல்லியை சேர்ந்தவர். அவரது பெயர் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.