இந்தியா

Viral Video: சாலையை சுத்தம் செய்த டிராஃபிக் போலீஸ்; ஏன் தெரியுமா?

JananiGovindhan

வெயில், மழை என அனைத்து கால நிலைகளிலும் போக்குவரத்தை சரி செய்வது அத்தனை சாத்தியமானதாக இருக்காது. என்னதான் டிஜிட்டல் வடிவில் சிக்னல்கள் வந்தாலும் சில நேரங்களிலும் நிகழும் போக்குவரத்து குளறுபடிகளை நேர்த்தியாக செய்து முடிப்பதே போக்குவரத்து போலீசாரின் பணியாக இருக்கும்.

இப்படி கச்சிதமாக போக்குவரத்து நெரிசலை டிராஃபிக் போலீசார் சரி செய்யும் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைதளங்கள் வாயிலாக காணக்கிடைத்தாலும் அவ்வப்போது மனிதாபிமானம் அடிப்படையில் அவர்கள் செய்யும் சில நிகழ்வுகளும் மக்கள் கண்ணில் அகப்படுவது தவறவில்லை.

அந்த வகையில் சிக்னல் போடப்பட்டிருந்த நேரத்தில், சாலையில் சிதறிக்கிடந்த கற்களால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து நேர்ந்திடக் கூடாது என எண்ணி சிறிதும் தயங்காமல் ஒரு டிராபிக் போலீஸ் தானாக முன்வந்து அதனை பெருக்கி சுத்தம் செய்தார். அவருக்கு உதவி செய்யும் வகையில் பின்னால் இருந்த ஒருவர் நெரிசல் ஏற்படாதவாறும் டிராஃபிக்கை க்ளியர் செய்கிறார்.

இது தொடர்பான வீடியோவை சத்தீஸ்கரைச் சேர்ந்த அவானிஷ் ஷரன் என்ற ஐ.எ.ஏஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அந்த டிராஃபிக் போலீசாரின் செயல் மரியாதைக்குரியது எனவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது.

வீடியோவை உற்று நோக்கையில், இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்திருப்பதாக அறிய முடிகிறது.

ALSO READ: