இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர்

சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர்

Rasus

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங் ஆஜரானார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரபத்ர சிங்கின் மனைவி பிரதிபா மற்றும் சிலர் மீது சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேரில் ஆஜரான வீரபத்ர சிங், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதன் மீது கருத்து தெரிவிக்க கால அவகாசம் வழங்குமாறு நீதிபதியிடம் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கை வருகிற 29ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இமாசலபிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது வீரபத்ரசிங் முதல்வராக பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த 2009-2011 ஆம் மத்திய அமைச்சராக இருந்தபோது வருமானத்தைவிட அதிகமாக 6 கோடியே 10 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வழக்குகள் பதிவு செய்தன. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.