திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகமிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க 500 ரூபாய் கட்டணத்தில் எல்1, எல்2, எல்3 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ஒரே கட்டணத்தில் மூன்று வகையான டிக்கெட்டுகளை வழங்கி பக்தர்களை பிரித்துப் பார்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் விஐபி தரிசன நடைமுறையை ரத்து செய்யக் கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, மூன்று வகையில் வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.