பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார். அதில், சசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதை டிஜிபி சத்திய நாராயணராவ் மறுத்துள்ளார். இருந்தாலும் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் கூறும்போது, விசாரணை அறிக்கை வெளியான பின், யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.