கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது
கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது முகநூல்
இந்தியா

வலுக்கும் எதிர்ப்புகள்; கேல் ரத்னா,அர்ஜுனா விருதுகளை திரும்ப அளித்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

PT

மல்யுத்தம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வினேஷ் போகத், தமது கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை திரும்ப அளித்துள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தடுக்கப்பட்ட அவர் இரண்டு விருதுகளையும் தலைநகரின் கர்தவ்ய பாத் முக்கிய சாலையின் நடுவில் விட்டு சென்றார்.

மல்யுத்த வீராங்கனைகள் நீதி கிடைப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், கேல் ரத்னா, அர்ஜுனா போன்ற விருதுகள் அர்த்தமற்றவையாகிவிட்டதாக கூறினார். விருதுகளை திரும்ப அளிக்கப் போவதாக அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்தபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவர் தனது விருதுகளை சாலையின் நடுவில் விட்டுச் சென்றார். அந்த விருதுகளை பின்னர் டெல்லி காவல்துறையினர் எடுத்துச் சென்றனர். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வினேஷ் போகத், சக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிடோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சாக் ஷி அறிவித்திருந்தார். பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கபப்ட்ட நிர்வாகிகளை இடைநீக்கம் செய்து விளையாட்டுத்துறை நடவடிக்கை எடுத்தது. மல்யுத்த சம்மேளனத்தை கவனித்துக்கொள்ள இடைக்கால குழு ஒன்றை நியமிக்கவும் இந்திய ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது.