நக்சலைட்டுகளை ஒழிக்க வீரியத்துடன் செயல்படுவதாக, உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டுகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசு, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த விஜயகுமார், நக்சலைட்டுகளை ஒடுக்க தேவையான ஆயுதங்களும் சாதனங்களும் இருப்பதாகவும், நக்சலைட்டுகளை ஒழிக்க வீரியத்துடன் செயல்படுவதாகவும் கூறினார்.