குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக கட்சி நாளை முறைப்படி பதவியேற்கிறது.
குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேலும் நாளை பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். இதற்காக குஜராத் காந்திநகரில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மத்திய அமைச்சர், கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி மதத்தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குஜராத் பாஜக தலைவர் ஜிடு வஹானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களை பெற்றுள்ளது.