விஜய் மல்லையா முகநூல்
இந்தியா

“நாட்டுக்காக உழைத்த நமக்கு அநீதி இழைப்பு” - லலித் மோடியின் எக்ஸ் தளப்பதிவுக்கு விஜய் மல்லையா ரிப்ளை!

நாட்டுக்காக உழைத்த தமக்கும் லலித் மோடிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

PT WEB

நாட்டுக்காக உழைத்த தமக்கும் லலித் மோடிக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி வழக்கில் வெளிநாடு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபரும் கிங்பிஷர் நிறுவனருமான விஜய் மல்லையா நேற்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு தன் ‘எக்ஸ்’ பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்த ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி,“வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்தது. நாம் இருவரும் அதை அனுபவித்துள்ளோம். இதுவும் கடந்துபோகும்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த விஜய் மல்லையா, “நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முயற்சி செய்த நமக்கு அநீதி இழைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.