இந்தியா

மல்லையாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கம்!

மல்லையாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கம்!

webteam

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியை காணச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் கோஷமிட்டனர். 

அவர், லண்டன் ஓவல் மைதானத்திற்குள் நுழைந்தபோது, திருடன் போட்டியைக் காண வந்திருக்கிறான் என அங்கு திரட்டிருந்த சிலர் முழக்கமிட்டனர். அப்போது அதனை பொருட்படுத்தாமல், மல்லையாக வேகமாக மைதானத்திற்குள் சென்றுவிட்டார். 
வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்வுக்கு கடன் பெற்றுள்ள விஜய் மல்லையா, அதை திரும்ப செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய போட்டியை ஏற்கனவே நேரில் பார்த்து ரசித்தார். அதே போன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியையும் மைதானத்திற்கு சென்று மல்லையா ப‌ர்த்தார்.