தண்டவாளாங்களில் சமைத்து சாப்பிடும் மக்கள்
தண்டவாளாங்களில் சமைத்து சாப்பிடும் மக்கள் PT
இந்தியா

மும்பை: இதுதான் எங்கள் முகவரி; ரயில்வே டிராக்கில் குடித்தனம் நடத்தும் குடும்பங்கள்

Jayashree A

சமீபத்தில் X வளைதள பக்கத்தில், மும்பையில் உள்ள மாஹிம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள சில மனிதர்கள் தண்டவாளங்களில் தூங்குவது , அங்கேயே அமர்ந்து உணவு சமைத்து சாப்பிடுவது அத்துடன், அவர்கள் குழந்தைகள் தண்டவாளங்களில் இங்கும் அங்கும் ஓடி விளையாடுவதைப் போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆபத்தை உணராமல்,நெருக்கம் நிறைந்த இத்தகைய நகரத்தில், மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் ரயில்வே தண்டவாளங்களை அவர்கள் தேர்ந்தெடுத்தனரா? அல்லது இவர்களின் இத்தகைய செயல்களை தடுப்பதற்கு ரயில்வே துறையில் யாரும் இல்லையா? என்ற கேள்வி நம்முள் எழுகின்றது. எல்லாவற்றிற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அரசாங்கம், இத்தகைய நிகழ்வுகளை கண்டும் காணாமல் விடுவது ஏன்?

விபத்து ஏற்பட காரணம்:

ரயில் வருவதை கவனிக்காமல், அவசரகதியில், இருப்புபாதைகளை கடந்து செல்வது, ஆபத்தான பொருட்களை இரயிலில் கொண்டு செல்வது, செல்போன் பேசிக்கொண்டே இருப்பு பாதைகளை கடப்பது என்று உயிருக்கு ஆபத்து நிறைந்த விஷயங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனாலேயே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன.

மக்களின் இத்தகைய செயல்கள், ரயில் பாதுகாப்பு விழிப்புணர்வில் குறையிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் மதுரையில் சுற்றுலா ரயிலில் பயணிகள் கேஸ் சிலிண்டர் எடுத்துச்சென்று சமைத்து சாப்பிடும்போது, விபத்துக்குள்ளாகி 9 பேர் பலியான செய்தி வெளியாகியது.