இந்தியா

நடைபாதை கடையை காலிசெய்ய மறுத்த மூதாட்டி - கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வீடியோ

நடைபாதை கடையை காலிசெய்ய மறுத்த மூதாட்டி - கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி: வீடியோ

Veeramani

சட்டீஸ்கர் மாநிலம் டுர்க் மாவட்டத்தில் நடைபாதையில் கடைவைத்திருந்த மூதாட்டி, தனது சிறு கடையை காலி செய்ய மறுத்ததால் அவரிடமிருந்த காய்கறிகளை மொத்தமாக வாங்கிக்கொண்டார் அம்மாவட்ட ஆட்சியர் அங்கிட் ஆனந்த். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

கொரோனோ ஊரடங்கு காரணமாக நடைபாதையில் உள்ள கடைகளை காலிசெய்ய சொல்லி டுர்க் மாவட்ட ஆட்சியர் அங்கிட் ஆனந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உத்தரவிட்டனர். ஆனால் வாழ்வாதாரத்துக்கு வழியில்லை என்று ஒரு மூதாட்டி தன் நடைபாதை கடையை காலிசெய்ய மறுத்தார். உடனடியாக அம்மூதாட்டி வைத்திருந்த மொத்த காய்கறிகளுக்குமான பணத்தை கொடுத்து கடையை காலி செய்யும்படி சொன்னார் ஆட்சியர். அதன்பிறகு மனநிறைவுடன் அம்மூதாட்டி இடத்தை விட்டு அகன்றார்.

ஆட்சியர் அங்கிட் ஆனந்தின் இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரின் மனிதாபிமான செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.