குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தன்கருக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைமை மருத்துவர் ராஜீவ் நரங் கூறியுள்ளார். தன்கரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே. பி.நட்டா மருத்துவமனைக்கு வந்து குடியரசு துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.