இந்தியா

வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் மத ரீதியிலான பயங்கரவாத அமைப்புகள்: சி.ஐ.ஏ

Rasus

வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகியவை மத ரீதியிலான பயங்கரவாத அமைப்புகள் என சிஐஏ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ ஆண்டுதோறும் ‘வேல்ட் ஃபேக்ட்புக்’  என்ற தலைப்பில் பல்வேறு விஷயங்களை வெளியிடும். இந்த அறிக்கையில் பல்வேறு உலக நாடுகளின் வரலாறு, பொருளாதாரம், ஆற்றல், அங்குள்ள மக்கள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளப்படும். 1962-ஆம் ஆண்டிலிருந்தே சிஐஏ இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சிஐஏவின் வேல்ட் ஃபேக்ட்புக்கில் விஷ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தாள் ஆகியவை மத ரீதியிலான பங்கரவாத அமைப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-ஸை தேசியவாத அமைப்பு என்றும் பதிவு செய்திருக்கிறது சிஐஏ. இந்நிலையில் பயங்கரவாதம் என்ற வார்த்தையை ஃபேக்ட்புக்கில் இருந்து நீக்காவிட்டால் சி.ஐ.ஏ.வுக்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடத்தப்படும் என விஷ்வ ஹிந்து பரிசத் தெரிவித்துள்ளது.