இந்தியா

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்!

மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்!

webteam

மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான குல்தீப் நய்யார் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான குல்தீப் நய்யார், பாகிஸ்தானின் பஞ்சாப் சியால்கோட் பகுதியில் 1923-ம் ஆண்டு பிறந்தார். உருது பத்திரிகையில் வாழ்க்கையை தொடங்கிய அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் பிரபலமான இவர், நெருக்கடி நிலை காலத்தில் முதன் முதலில் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர். ஐ.நா சபையில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். இந்திய - பாகிஸ்தான் நல்லுறவு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லியில் உள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவர் உயிர் பிரிந்தது. அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் நடக்கிறது.

மறைந்த நய்யாருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.