இந்தியா

முத்தலாக் விவகாரத்தில் அரசே சட்டமியற்ற நேரிடும்: வெங்கய்யா நாயுடு

முத்தலாக் விவகாரத்தில் அரசே சட்டமியற்ற நேரிடும்: வெங்கய்யா நாயுடு

webteam

முத்தலாக் நடைமுறையை மாற்ற இஸ்லாமியர்கள் முன்வராவிட்டால், அதனை தடை செய்து மத்திய அரசு சட்டமியற்ற நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

இது குறித்து வெங்கய்யா நாயுடு கூறியதாவது; சட்டத்தின் முன் நாட்டில் உள்ள அனைவரும் சமம். இந்து சமயத்தில் இருந்த மூடப்பழக்கங்களை அகற்ற சட்ட இயற்றப்பட்டது போல் முத்தலாக் நடைமுறையை மாற்ற இஸ்லாமியர்கள் முன்வரவேண்டும். இல்லையென்றால் அதனை தடை செய்து மத்திய அரசு சட்டமியற்ற நேரிடும் என்றும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

முத்தலாக் குறித்த வழக்கு விசாரணையின் போது, அந்த நடைமுறை சமூக வழக்கமாக இல்லாமல் மத சட்டத்தின் ஒருபகுதியாக இருந்தால் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் கூறியிருந்த நிலையில், வெங்கய்யாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.