இந்தியா

எய்ம்ஸில் வெங்கய்யா நாயுடுவுக்கு ஆஞ்சியோ சோதனை

எய்ம்ஸில் வெங்கய்யா நாயுடுவுக்கு ஆஞ்சியோ சோதனை

webteam

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு ஆஞ்சியோகிராம் சோதனை செய்யப்பட்டது. 

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோகிராம் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதயத்திற்கு செல்லும் ஒரு குழாய் சுருங்கி இருப்பது கண்டறியப்பட்டு ஸ்டென்ட் (stent ) பொருத்தப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்‌.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக குடியரசு துணைத் தலைவர்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நாளை (இன்று) டிஸ்சார்ஜ் ஆவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.