இந்தியா

ஆங்கிலம் படிக்கலாம், ஆங்கிலேயராக வாழக்கூடாது: வெங்கய்யா நாயுடு

ஆங்கிலம் படிக்கலாம், ஆங்கிலேயராக வாழக்கூடாது: வெங்கய்யா நாயுடு

webteam

ஆங்கிலம் படியுங்கள், ஆனால் ஆங்கிலேயராக வாழக்கூடாது என்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கய்யா நாயுடு, “தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வியில் குழந்தைகளை தமிழிலேயே படிக்க வையுங்கள். தாய், தாய்மொழி, தாய்மண் மூன்றையும் என்றும் மறக்கக்கூடாது. மறந்தால் மனிதாக வாழ இயலாது. ஆங்கிலம் படியுங்கள், ஆனால் ஆங்கிலேயராக வாழாதீர்கள். எனது மகள் நடத்தும் பள்ளியின் வாசலில் உள்ள பலகையில், இங்கு பயிற்றுவிப்பு மொழி ஆங்கிலம் என்றும், கலாசாரம் இந்தியாவுடையது என்றும் எழுதியுள்ளது. நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். மற்ற மொழிகளை கற்கலாம், நான் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் அல்ல” என்று பேசினார்.