இந்தியா

ஆளுநர் பாரபட்சமற்ற முறையில் செயல்படுகிறார்: வெங்கய்யா நாயுடு

ஆளுநர் பாரபட்சமற்ற முறையில் செயல்படுகிறார்: வெங்கய்யா நாயுடு

webteam

பாரபட்சமற்ற ‌முறையில் செயல்பட்டு வரும் ஆளுநர் வித்யா சாகர் ராவின் பணியில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது ‌என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், அரசியல் சட்டப்படி தமிழகத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரிடம், மாநில மக்களுக்கு நிலையான அரசை ஏற்படுத்த வேண்டிய கடமை இருப்பதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதா ஏற்கனவே இரண்டு முறை ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக நியமித்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியினர்தான் மீண்டும் பன்னீர்செல்வத்தை முத‌ல்வராக தேர்வு செய்ததாக வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகப் பேச நான் ஒன்றும் அவரது வழக்கறிஞரல்ல என்று கூறிய அவர், அதிமுகவில் நடந்து வரும் உட்கட்சிப் பிரச்னைக்கு அவர்கள்தான் தீர்வு காண வேண்டும் என்றும், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாரதிய ஜனதா விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றும் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் முயற்சியை வரவேற்பதாகவும் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.