கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழ்நாட்டிலிருந்து கன்னியாகுமரி வழியாகச் செல்லும் வாகனங்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரண்டாவது வாரமாக ஞாயிறு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான மருந்து, காய்கறிக் கடைகள் மற்றும் பால் விற்பனை மையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருத்துவம், விமான நிலையம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
முழு முடக்கத்தையொட்டி கேரளா - தமிழ்நாடு எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுடன் செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: உடற்பயிற்சி கூடங்களைத் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை