இந்திய தேர்தல் ஆணையம் என்பது பல் இல்லாத புலிக்கு ஒப்பானது என பாரதிய ஜனதா பிரமுகர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கருத்தரங்கில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 8-ம் தேதிநடைபெறும் என்று அறிவித்த தேர்தல் ஆணையம் குஜராத் மாநிலத்துக்கு மட்டும் தேர்தல் தேதியை அறிவிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ‘‘வளர்ச்சிப் பணிகளை முடிக்க குஜராத் அரசு அவகாசம் கேட்டதால், அங்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை’’ என தலைமை தேர்தல் ஆணையர் ஜோதி விளக்கம் கொடுத்தார்.
இதனிடையே, குஜராத்துக்கு மட்டும் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்காதது மத்திய அரசின் நெருக்கடியின் காரணமாகத்தான் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் என்பது பல் இல்லாத புலிக்கு ஒப்பானது என பாரதிய ஜனதா பிரமுகர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியும் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில் பாஜக பிரமுகர் வருண் காந்தியின் கருத்தும் முக்கியத்துவம் பெறுகிறது.