இந்தியா

அலகாபாத்திலும் வந்தே மாதரம் சர்ச்சை

அலகாபாத்திலும் வந்தே மாதரம் சர்ச்சை

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுத்ததால் அமளி ஏற்பட்டது.

மாமன்ற கூட்டம் தொடங்கும் போது வந்தே மாதரம் பாட வேண்டும் என அலகாபாத் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு சமாஜ்வாதி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக மீரட் மாமன்ற கூட்டத்திலும் உறுப்பினர்கள் வந்தே மாதரம் பாட மறுத்ததால் பிரச்னை ஏற்பட்டது.