இந்தியா

எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு - வைரமுத்து

எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு - வைரமுத்து

subramani

டெல்லியில் நடக்கும் வன்முறை தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லியில் தொடர் வன்முறை நிகழ்ந்து வருகிறது. தற்போது வரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ரஜினி, சேவாக் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றமும் , வன்முறையை தூண்டும் விதமாக பேசிய அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. தற்போது பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் CAA தொடர்பாக கவிதை வடிவிலான கருத்தொன்றை பதிவிட்டுள்ளார் அதில்.,

“எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.
#CAA”

சிறுபான்மை மக்கள் பலரும் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் “அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பி இருப்பது கவனத்திற்குரியது.