வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 தினங்களை முன்னிட்டு 86ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் 40 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக இந்த ஆண்டு தரிசனம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழிபாடு செய்வதற்கு வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடும் குளிர் காரணமாக பக்தர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 30.12.2017 நேற்று மாலை வரை வரிசையில் நின்றவர் மட்டுமே வைகுண்ட வாயில் வழியாக செல்ல முடியும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.