இந்தியா

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்

Rasus

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய வைகோ, “ நியூட்ரினோ திட்டத்துக்கான சுரங்கம் தோண்டும்போது கேரளாவின் மிகப்பெரிய இடுக்கி அணை உடைந்து நொறுங்கும். முல்லைப்பெரியாறு அணையும் நொறுங்கும். உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயலிழக்கச் செய்வது இந்தத் திட்டத்தின் நோக்கங்களுள் ஒன்று.

நாகசாகி, ஹிரோஷிமா போல தமிழ்நாடு எதிரிகளின் தாக்குதல் மையமாகிவிடும். முன்னாள் கேரள முதல்வர்கள் இதனை எதிர்த்துள்ளனர். நியூட்ரினோ திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.