இந்தியா

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ ஆட்கொணர்வு மனு

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ ஆட்கொணர்வு மனு

Rasus

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கோரி எம்.பி. ஆன வைகோ மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அங்கு பலகட்சி அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேசமயம் ஃபரூக் அப்துல்லாவை கைது செய்யவில்லை என்றும் வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.