இந்தியா

தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் குஜராத் பெண் - ஏன் இந்த முடிவு தெரியுமா?

தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் குஜராத் பெண் - ஏன் இந்த முடிவு தெரியுமா?

JustinDurai

''நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகளாக விரும்புகிறேன்'' எனக் கூறுகிறார் கஷமா பிந்து.  

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த கஷமா பிந்து என்ற 24 வயதான இளம்பெண், வரும் ஜூன் 11ஆம் தேதி தனக்கு நடைபெறவிருக்கிற வினோதமான திருமணத்திற்கு தயாராகி வருகிறார். கஷமா பிந்துவை மணக்கப்போகும் மணமகன் யார் என்றால், அப்படி ஒருவரே கிடையாது. தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார் அந்தப்பெண், அதுவும் பெற்றோர் சம்மதத்துடன்.

இதுகுறித்து மணமகள்  கஷமா பிந்து கூறுகையில், "நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகளாக விரும்புகிறேன். அதனால்தான் என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன். இந்தியாவில் வேறு எந்தப் பெண்ணும் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டாரா என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால் அப்படி யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை நம் நாட்டில் சுய-அன்புக்கு ஒரு முன்மாதிரியாக நான் இருக்கலாம் இல்லையா?

சுய-திருமணம் என்பது தனக்காக நிபந்தனையற்ற அன்பு. இது சுயமாக ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட. மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன், அதனால் என்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் இந்த திருமணத்தில் மந்திரங்கள் ஓத, மணமகள் அலங்காரம் உள்ளிட்ட  வழக்கமான திருமண சம்பிரதாயங்கள் பின்பற்றப்படும் என்றும் திருமணம் முடிந்ததும்  தேனிலவு கொண்டாட கோவா செல்லவிருப்பதாகவும் கஷமா பிந்து கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம்: ஃபேஸ்புக் மூலம் சிக்கிய செல்போன் திருடன்: ம.பி.யில் நடந்த சுவாரஸ்யத்தின் பின்னணி