உத்தரப் பிரதேச மாநிலம் தவுலானா பகுதியில் பாரதிய ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற கூலிப்படையைச் சேர்ந்த இருவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் தவுலானா பகுதியை சேர்ந்தவர் சபா சிங். பாஜக பிரமுகராக இவரை கொலை செய்ய கூலிப்படையினர் முயற்சி செய்துள்ளனர். துப்பாக்கிகளுடன் வந்த கூலிப்படையினரை சுற்றி வளைத்த கிராம மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.அவர்களிடம் இருந்த துப்பாக்கியைய பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கூலிப்படையினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சபாசிங்கைக் கொல்ல ஒரு லட்சம் பணம் பெற்றது தெரிய வந்தது. கூலிப்படையைச் சேர்ந்த இருவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.