கும்பமேளா, விமானம் எக்ஸ் தளம்
இந்தியா

மகா கும்பமேளா | அதிரடியாக உயர்ந்த விமானக் கட்டணம்!

உத்தரப்பிரதேச மகா கும்பமேளாவை முன்னிட்டு விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

Prakash J

உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, 3 நதிகள் சங்கமிக்கும் இந்த திரிவேணி சங்கமத்தில், உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், பிரயாக்ராஜ் நகருக்கான விமானக் கட்டணம் 50 ஆயிரம் ரூபாயைக் கடந்துள்ளது.

மகா கும்பமேளா

அமாவாசை திதி, வரும் ஜனவரி 29ஆம் தேதி வரும் நிலையில், இன்றுமுதல் 3 நாள்களுக்கு சென்னையில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல பயணக் கட்டணமானது 53 ஆயிரம் ருபாய் வரை உயர்ந்துள்ளது. அதேபோல், பெங்களூருவில் இருந்து பிரயாக்ராஜ் செல்ல விமானக் கட்டணம் 51 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

அதுவே டெல்லி, மும்பை, ஐதராபாத் நகரங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு 47 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சாதரண நாள்களில் உள்ள கட்டணத்தைவிட ஏழரை சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானக் கட்டணமும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.