இந்தியா

உத்தரப்பிரதேசம்: மனைவி தினமும் குளிக்க மறுக்கிறார் எனக் கூறி விவாகரத்து கோரிய கணவன்

Veeramani

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகாரைச் சேர்ந்த முஸ்லீம் ஆண் ஒருவர், தனது மனைவி தினமும் குளிக்காததால் விவாகரத்து கோரியது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

அந்த பெண் குவார்சி கிராமத்தைச் சேர்ந்தவர், ஆண் சந்தாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு வயது குழந்தை உள்ளது. தினமும் குளிக்கவில்லை எனக் கூறி கணவர் விவாகரத்து கோரிய பிறகு, தனது திருமண பந்தத்தை காப்பாற்ற அந்த பெண், பெண்கள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தார். இந்த தம்பதியருக்கு தற்போது அலிகார் பெண்கள் பாதுகாப்பு மையம் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய பெண்கள் பாதுகாப்பு மைய ஆலோசகர், அந்த பெண் தனது திருமண வாழ்க்கையை தொடரவும், தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழவும் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அந்த ண், மனைவியுடனான திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாகத் திரும்பத் திரும்ப உறுதியா கூறினார். மேலும், அந்த நபர் தனது மனைவியை குளிக்க சொன்னதால் ஒவ்வொரு நாளும் தங்களுக்குள் சண்டை ஏற்படுவதாகவும் கூறினார்.

இந்த தம்பதியினருக்கு அவர்களின் திருமண உறவை தொடர்வது பற்றி சிந்திக்க பெண்கள் பாதுகாப்பு மையம் அவகாசம் அளித்துள்ளது. விவாகரத்து விண்ணப்பத்திற்கான இந்த காரணம் எந்தவொரு வன்முறைச் சட்டம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றத்தின் கீழ் வராது என்பதால், மனுவை முன்னெடுக்க முடியாது என்றும் பெண்கள் பாதுகாப்பு மைய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.மேலும், ஆலோசனையின் மூலமாக பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.