Uttarakhand Tunnel  pt web
இந்தியா

Uttarakhand Tunnel.. சற்றுநேரத்தில் வெளியே வரப்போகும் 41 உயிர்கள்.. களநிலவரம் என்ன?

உத்தராகண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்னும் சற்றுநேரத்தில் மீட்கப்படவுள்ளனர். 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப்பணியின் பயனாக தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படவுள்ளனர்.

PT WEB

இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணி தோல்வியடைந்த நிலையில், 12 தொழிலாளர்கள் சிறு கருவிகளை கொண்டு சுரங்கத்தில் கிடைமட்டமாக தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அதன் மூலம் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை மீட்புப்படையினர் நெருங்கியுள்ளனர். சுரங்கத்திற்கு வெளியே காத்திருக்கும் தொழிலாளர்களின் உறவினர்கள் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். சுரங்கம் அமைந்துள்ள சில்க்யாராவிலிருந்து 30 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.