இந்தியா

ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சிறுமி - இழுத்துச் சென்ற சிறுத்தை!

webteam

(மாதிரிப்படம்)

உத்தரகாண்ட மாநிலத்தில் வீடு அருகே ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்த சிறுமியைச் சிறுத்தை தாக்கி தூக்கிச் சென்றது.

உத்தரகாண்ட மாநில பெய்ல்பராரோ வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகன் பகுதியைச் சேர்ந்தவர் மம்தா. எட்டாம் வகுப்பு படித்து வந்த இவர்
தனது வீட்டில் அருகேயுள்ள கால்வாய் கரையோரத்தில் அமர்ந்துகொண்டு ஹெட்போன் மூலம் பாட்டுக்கேட்டுக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சிறுத்தை மம்தாவைத் தாக்கி வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறையினர்,
கிராமத்தினர் தகவல் கொடுத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றோம்.

(மாதிரிப்படம்)

அப்பகுதியில் சீப்பும், ஹெட்போனும் கிடந்தது. அந்தச் சிறுமி ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்திருக்க வேண்டும். அதனால் சிறுத்தை வரும் சத்தம் கேட்கவில்லை என நினைக்கிறோம். சிறுமியின் உடல் அருகில் உள்ள புதரிலிருந்து மீட்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்தப்பகுதியில் இரண்டு கூண்டுகள் 7 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் அதே பகுதிக்குள் சிறுத்தை வந்தது. ஆனால் கிராமத்தினர் அலாரம் ஒலி எழுப்பியதால் அது கூண்டுக்குள் சிக்காமல் வனத்துக்குள் ஓடி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

(மாதிரிப்படம்)

தொடர்ந்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் நிவாரத் தொகையும் வழங்கப்பட்டது.