புஷ்கர் சிங் தாமி x page
இந்தியா

உத்தராகண்ட் | 11 நகரங்களில் உள்ள பகுதிகளின் பெயர்கள் மாற்றம்!

உத்தராகண்ட் மாநிலத்தில் 11 நகரங்களில் உள்ள பகுதிகளின் பெயர்களை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாற்றியுள்ளார்.

PT WEB

உத்தராகண்ட் மாநிலத்தில் 11 நகரங்களில் உள்ள பகுதிகளின் பெயர்களை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாற்றியுள்ளார். உத்தராகண்ட்டில் 4 மாவட்டங்களில் இந்த பெயர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எந்தெந்த இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன என்ற பட்டியலையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பெயர் மாற்றப்பட்டுள்ள நகரங்கள், பகுதிகள் விவரம் வருமாறு:

1. ஹரித்துவார் மாவட்டம்: [புதிய பெயர் அடைப்புக்குறிக்குள்) ஔரங்கசீப்பூர் (சிவாஜி நகர்) ஜான்ஜியாலி (ஆர்யா நகர்)சௌத்பூர் (ஜோதிபா பூலே நகர்) முகமதுபூர் ஜாட் (மோகன்பூர் ஜாட்) கான்பூர் குரேஷி (அசோகா நகர்)திர்பூர் (நந்த்பூர்)கான்பூர் (ஸ்ரீ கிருஷ்ணாபூர்) அக்பர்பூர் பசல்பூர் (விஜயநகர்).

புஷ்கர் சிங் தாமி

2. டேராடூன் மாவட்டம் பிருவாலா (ராம்ஜீவாலா) பிருவாலா விகாஷ்நகர் (கேசரி நகர்) சௌத்பூர் குர்த் (பிருத்விராஜ் நகர்)அப்துல்லாபூர் (தஷ்ரத் நகர்)

3. நைனிடால் மாவட்டம் நவாபி சாலை (அடல் மார்க்) பஞ்சக்கி முதல் ஐ.டி.ஐ., மார்க்கம் (குரு கோவல்கர் மார்க்)

4. உதம் சிங் நகர் மாவட்டம் நகர் பஞ்சாயத்து சுல்தான்பூர் பட்டி (கௌசல்யா பூரி)

பெயர்கள் மாற்றம் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “ ஹரித்துவார், டேராடூன், நைனிடால், உதம்சிங் நகர் மாவட்டங்களில் பல இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களின் எண்ணம், அவர்களின் கலாசார பாரம்பரியங்களுடன் இந்த பெயர்கள் ஒத்து போகின்றன. நாட்டின் மரபுகளை பாதுகாக்க அவர்களின் பங்களிப்பை நினைவு கூர்வதே இதன் நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.