uttarakhand
uttarakhand  twitter
இந்தியா

மின்மாற்றி வெடித்ததில் 3 போலீசார் உட்பட 16 பேர் உயிரிழப்பு! உத்தரகாண்ட்டில் சோக நிகழ்வு

Prakash J

உத்தரகாண்ட் மாநிலம் அலக்நந்தா ஆற்றங்கரையில் நமாமி பிபால்கோட்டி பகுதியில் இருந்த மின்மாற்றி வெடித்ததில் இந்த விபரீதம் நேர்ந்துள்ளது. 16 பேர் இறந்த நிலையில் மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்த 16 பேரில் 3 பேர் காவல்துறையினர் என்றும் 3 பேர் ஊர்க்காவல் படையினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இவ்விபத்து குறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

uttarakhand

இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக சமோலி காவல்துறை கண்காணிப்பாளர் பிரமேந்திர டோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் துறை தரப்பில், “பாதுகாவலர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. பஞ்சநாமா (ஸ்பாட் இன்ஸ்பெக்‌ஷன்) கிராம மக்களின் பாதுகாப்புக்காக காவல் துறையினர் சென்றபோது, 22 பேர் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தனர். இதில், 16 பேர் மருத்துவமனையில் இறந்தனர். 7 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.